வீட்டிலே எளிய முறையில் சூரிய ஒளி மின்சார அமைப்பை பொருத்துவது எப்படி? How to install solar energy system at home?
இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சுழல், மாசு எரிபொருள் சிக்கனம் என்பது மிகவும் இன்றியமையாதது. இவற்றை கடைபிடிக்க ஒரே வழி மரபு சாரா எரிசக்தி ஆகும். அது என்ன மரபு சாரா எரிசக்தி? அதாவது தொன்றுதொட்டு மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்துவது அனல் மின் நிலையம் அல்லது நீர் மின் நிலையம். இவற்றை தவிர்த்து, இந்த மரபு முறைகளை தவிர்த்து புதிய முறையில் மின்சாரம் தயாரிப்பதே மரபு சாரா எரிசக்தி ஆகும். இதிலும் பல்வேறு வகைகள் உண்டு. ஒன்று சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது. இன்னொன்று கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது இதனை Tidel Energyஎன்று குறிப்பிடுவதுண்டு. இன்னொன்று Geothermal அதாவது பூமிக்கடியில் கிடைக்கப்பெறும் வெப்பத்தை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வதே Geeothermal ஆகும். சூரிய ஒளி மின்சாரத்தி தவிர மற்ற இரண்டு தொழில்நுட்பத்திலும் மின்சார தயார் செய்வதற்கு அதிக Technology மற்றும் Infrastructure தேவை, மற்றும் முதலீடும் அதிகம். ஆனால் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயார் செய்வது என்பது மிகவும் எளிது. சிறிய Capacity முதல் பெரிய Power P...