Bio Enzyme என்பது நுண்ணுயிர்களால் நொய்தல் செய்து, அதை பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்துவது. சரி இதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? Bio Enzyme ஐ அணைத்து விதமான Cleaning Process கும் பயன்படுத்தலாம். உதாரணமாக பாத்திரங்கள், பித்தளை விளக்குகள், அதிக கரி பிடித்த பாத்திரங்கள், தரையை சுத்தம் செய்வது என பல்வேறு உபயோகங்கள் உண்டு. இது சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், சிறந்த கிருமி நாசினி ஆகவும் பயன்படுகிறது. இதை தயாரிக்க சந்தையில் இருந்து ஏதும் மூலப்பொருட்கள் வாங்க தேவை இல்லை. வீட்டிலே கிடைக்கும் / இருக்கும் பொருட்களை கொண்டு இதனை தயாரித்து விடலாம். சரி எப்படி தயாரிப்பது என்று பாப்போம்
இதற்கு தேவையான மூல பொருட்கள் சாப்பிட்டு மிஞ்சிய ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி மற்றும் எலுமிச்சை தோல் தான். இந்த தோள்களை சிறிது சிறிதாக அறிந்து அதை ஒரு Glass Bottle இல் போட்டு கொள்ளவும். பின்பு அதில் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி நன்கு கிளறவும். பின்பு சிறிது தண்ணீர் கலந்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு சிறிய சிட்டிகை அளவு Yeast ஐ சேர்த்து கொள்ளவும். இந்த கலவை நன்றாக கிளறி அந்த Mixture ஐ காற்று புகாத வண்ணம் Bottle இல் Tight ஆ
அடைத்து கொள்ளவும். ஒரு மூன்று நாள் கழித்து அதை திறந்து ஒரு கலக்கு கலக்கி மறுபடியும் மூடி வைத்து விட வேண்டும். இதை அப்படியே மூடி ஒரு 20 முதல் 25 நாள் வரை வைத்து விட்டால் இந்த கலவி நொய்தல் முறையில் நெகிழ்ந்து நொதிந்து திடமாக போடப்பட்ட தோள்கள், நொய்ந்து கூல் போல திரவமா ஆகி விடும். அவ்ளோதான் Bio Enzyme தயார் ஆகி விட்டது. உங்களுக்கு இதில் வாசனை வேண்டும் என்றால் ரோஜா இதழ்களையோ அல்லது மல்லிகை பூவையோ அந்த தோள்களுடன் சேர்த்து நொதிக்க விட்டால் உங்கள் Bio Enzyme கு வாசனை சேர்ந்து விடும்.
இதை எல்லா விதமான Cleaning தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
இதை எப்படி பயன்படுத்துவது?
இந்த Bio Enzyme கூலானது அதிக Concentration கொண்ட கூல் ஆகும். எனவே இதை பயன்படுத்துகிறோம்
பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்துகிறோம் என்றால் ஒன்றுக்கு ஐந்து என்ற அளவில் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி பயன்படுத்தவும். அதுவே வீட்டின் தரையை சுத்தம் செய்ய பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஒன்றுக்கு இருபது என்ற Ratio வில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இந்த Bio Enzyme களுக்கு இப்பொழுது பெரிய வரவேற்பும் உள்ளது. அதனால் இதை வியாபார நோக்கிலும் கூட தயாரிக்கலாம்.
என்னங்க கொடுத்த தகவல் பயனுள்ளதாக இருக்கா? இருந்தா Comment இல்
சொல்லுங்க. உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கும் தெரிய படுத்துங்க. உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம்
இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி
Comments
Post a Comment