ECBC என்றால் என்ன ?
ECBC என்பது Energy Conservation Building Code ஆகும். ஆதாவது நாம் கட்டப்படும் Building இல் Energy, அதாங்க ஆற்றல் சிக்கனம் உள்ள கட்டிடமா என்று ஆராய்ந்து Certificate கொடுப்பது தான். சரி அது என்ன எப்படி கட்ட வேண்டும்? அதனால் என்னென்ன பயன் என்று இந்த பதிவில் காண்போம்.
முதலில் கட்டிடங்கள் இரன்டு வகை படும் ஒன்று Domestic அதாங்க வீடு இனொன்று
Commercial அதாங்க வணிகம் சம்பந்தப்பட்டது.
முதலில் நாம் நமது வீட்டில் இதை எப்படி
Implement படுத்தலாம் என்று பார்க்கலாம். முதலில் வீட்டில் ஆற்றல் எதற்குஎல்லாம் பயன்படுகிறது என்று பார்ப்போம்.
வீட்டில் பயன்படுத்தப்படும் முதன்மை ஆற்றல் Electricity ஆகும் அதாங்க மின்சாரம் ஆகும். சரி மின்சாரம் பயன்படுத்தும் கருவிகளை முதலில் பாப்போம். முதலாவதா வீட்டில் வெளிச்சத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது Lighting கு. சரி Lighting இல் மின்சாரத்தை எப்படி சேமிக்கலாம் என்று பார்க்கலாம். பொதுவாக ஒவ்வொரு Rooms கும் ஒவ்வொரு வெளிச்சத்தின் அளவு தேவைப்படும். அதாவது Hall இல் சற்று Normal ஆகவும் Kitchen இல் சற்றே அதிகமாகவும்
Study Room இல் சற்றே அதிகமாகவும், படுக்கைறையில் அதாங்க Bedroom இல் குறைவாகவும், என்று ஒவ்வொரு Room மிலும் அதன் பயனுக்கு தேவை உள்ள அளவு இருந்தால் போதும். இதை ஆங்கிலத்தில்
Lumens என்று அளவிடுகிறோம். நாம் எந்த ஒரு Lightd ஐ வாங்கினாலும் அதில் Lumens ன் அளவு குறிப்பிட்டு இருக்கும்.
இதற்கும் Watts கும் நேரிடை சம்பந்தம் இருக்கு. அதாவது Watts ன் அளவு அதிகரித்தல்
Lumens ன் அளவும் அதிகமா இருக்கும். இப்பொழுது நாம் செய்ய செய்வேண்டியதெல்லாம் நாம் கடைகளில் வாங்கும் Light களில் தேர்ந்துஎடுக்கும்
பொழுது குறைவான Watts இல் அதிக Lumens உள்ள Lights களை தேர்ந்து எடுக்க வேண்டும். நமது அறையின் பயன்பாட்டிற்கு ஏற்ப அதன் Lumens ஐ தேர்ந்து எடுக்கவேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக இன்று Market இல் கிடைக்கும் LED Lights தான். இது குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும். இவ்வாறு பார்த்து பார்த்து Lights களை தேர்ந்து எடுத்தால் நமது மின்சார பயன்பாட்டிலிருந்து 3 முதல் 8 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம்.
அடுத்தாக மின்சாரத்தை பயன்படுத்தும் உபகரணம் காத்தாடி அதாங்க
Fans ஆகும். இன்றைய நவீன
Technology இல் மிகவும் சிக்கனம் வாய்ந்த Fan கள் வந்துவிட்டது. பொதுவாக நமது Fan கள் 60 முதல் 70 Watts வரை மின்சாரத்தை பயன்படுத்தும். ஆனால் இது போன்ற மின் சிக்கனம் உள்ள Fan கள் 30 Watts லேயே அதன் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும். இந்த Fan களை BLDC என்று அழைக்கிறார்கள். அதாவது இதன் விரிவாக்கம் Brushless Direct Current ஆகும். இப்படி Fans பயன்படுத்தப்படும் மின்சாரத்தை சேமிப்பதின் மூலம் நமது மின்சார தேவையை 5 முதல் 10 சதவிகிதம் வரை குறைத்து கொள்ளலாம்.
அடுத்த கருவி Air Conditioners ஆகும். பொதுவாக இதன் மின்சார சிக்கனம் Star Rating இல் அளவிடப்படுகிறது. அதாவது இந்திய அரசாங்கத்தின் Energy Efficiency Division அதாவது BEE என்ற ஒரு Department இதற்கு Star Rating கொடுக்குறது.
அதாவது 1 Star என்றால் அதிக மின்பயன்பாடு என்றும் 5 Star என்றால் குறைந்த மின் பயன்படும் என்று வகையறைப்படுத்தியுள்ளார்கள்.
இதில் தாங்க நாம் சொல்ல வந்த ECBC அதிக பயன்பாடு ஆகிறது. பொதுவாக Air
Conditioning காக நமது மின்சார உபயோகத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை செலவிடுகிறோம். இதில் எப்படி சிக்கனத்தை மேற்கொள்ளலாம்.
முதலில் இதன் Star Rating ஆல் 10 முதல் 15 சதவீதம் வரை மின்சாரத்தை சேமித்துக்கொள்ளலாம். மீதமுள்ள 25 சதவிகித மின்சாரத்தை எப்படி சேமிப்பது? இதற்கு தான் Thermal Insulation பயன்படுகிறது. அதாவது நாம் Air Conditioner ஆல் குளிர்விக்கப்படும் ஆற்றல் சிறிது நேரத்தில் கதவு இடுக்கு வழியாகவும், ஜன்னல் வழியாகவும், வெண்டிலேட்டர் வழியாகவும் சுவர்களின் வெப்பம் கடத்தும் தன்மையாலும் அதாவது Conductivity ஆல் நமது ஆற்றல் வீண் ஆகிறது.
இதற்கு முதலில் நமது அறையில் உள்ள ஓட்டைகளை அதாவது Gap களை அடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் 5 சதவிகிதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம். அடுத்து சுவர்களின் வெப்பம் கடத்தும் தன்மையை குறைப்பதால் மீதமுள்ள 20 சதவிகித மின் பயன்பாட்டை குறைக்கலாம்.
சரி இதை எப்படி குறைப்பது?
அதற்கு தாங்கThermal Insulation பயன்படுகிறது. இந்த
Thermal Insulation Material கள் வெப்பத்தை மற்றும் குளிரை கடத்தாத வன்னம் அதை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது. அதாவது இதன் முக்கிய செயல் வெளியில் இருக்கும் வெப்பத்தை உள்ள வர விடாமலும், உள்ளே உள்ள குளிரை வெளியச்செல்ல விடாமலும் தடுக்கும். இதனால் நமது மின்பயன்பாடு குறையும். பொதுவாக 8 மணி நேரம் Air
Conditioner ஐ இயக்க வேண்டும் என்றால், இந்த முறை Thermal
Insulation செய்து Air Conditioner ஐ இயக்கினால் 5 முதல் 6 மணி நேரம் இயக்கினால் போதுமானது. இம்முறையை பின்பற்றுவதன் மூலம் நமது மின் கட்டணத்தை வெகுவாக குறைத்துவிடலாம்.
என்னங்க தகவல் பயனுள்ளதா இருக்கா? இருந்தா கமெண்ட் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். மேலும் இது போல பல புதிய தகவல்களை தெரிந்து கொள்ள அல்லது இதன் தொடர்ச்சியை தெரிந்து கொள்ள இணைந்த இருங்கள்.
நன்றி
Comments
Post a Comment