Biogas என்றால் என்ன? அதை எப்படி உற்பத்தி செய்வது? அதை எப்படி பயன்படுத்துவது?
Biogas என்பது
இயற்கை எரிவாயு ஆகும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் Gas Cylinder இல் LPG எனப்படும் Liquefied
Petroleum Gas அடைக்கப்பட்டு தரப்படுகிறது. இந்த Gas பூமியில்
உள்ள கனிம வளங்களால் கிடைக்கப்படுகிறது. இதை பூமியில் இருந்து
எடுப்பதற்கு நிறைய இயந்திரங்களும் தொழில்நுட்பங்களும் தேவை. ஆனால் Bio Gas என்பது
பெரிய தொழில்நுட்பம் எதுவும் இல்லாமலேயே சிறிய அளவில் வீட்டிலே எரிவாயு தயார்
செய்ய முடியும்.
சரி
அது எப்படி இயங்குகிறது? அதை எப்படி செய்யவேண்டும் என்று இந்த பதிவில் காண்போம். Bio Gas உற்பத்தி
செய்ய Anaerobic Digestion என்னும் தொழில்நுட்பம்
பயன்படுகிறது. அதாவது தமிழில் நுண்ணுயிர்களால் மக்கவைப்பது. இந்த முறையில் நமக்கு
இரண்டு வகையான உட்பொருள் கிடைக்கிறது. ஒன்று எரிவாயு, மற்றொன்று இயற்கை உரம். சரி
இதை எப்படி வீட்டிலே சிறிய அளவில் உற்பத்தி செய்வது என்று பாப்போம்.
இதற்கு
முக்கியமா பயன்படுத்தப்படுவது Plastic Drum கள் ஆகும். அதாவது ஒரு
பெரிய Drum உம், விட்டம் பெரிதாக உள்ள Drum,
இன்னொன்று சற்றே சிறிய விட்டம் உள்ள Drum உம்
தான். அதவது சின்ன Drum பெரிய Drum குள்
போகுமாறு இருக்க வேண்டும். அந்த பெரிய Drum ன்
நடுவில் பக்க வாட்டில் இரண்டு துளைகளை இட்டுக்கொள்ள வேண்டும். ஒரு துளை கழிவுகளை
போடவும், மற்றொரு துளை உபரி நீரை வெளியேற்றுவதற்காக.
இப்பொழுது
நமது வீட்ல தினமும் கிடைக்கும் காய்கறி கழிவுகள் மற்றும் இதர மக்க கூடிய கழிவுகளை
இந்த பெரிய Drum இல் போட்டு அதற்கு மேல் அந்த கழிவுகள் முங்கும் அளவிற்கு தண்ணீரால்
நிரப்பி கொள்ள வேண்டும். பின்பு நம்மிடம் உள்ள அந்த சிறிய Drum ஐ
தலைகீழாக கவுத்த நிலையில் அந்த பெரிய Drum குள்
கவுத்தி, அந்த தண்ணீர் இருக்கும் அளவை இந்த சிறிய Drum ன் வாய்
பகுதி தொடுமாறு கவுத்தி வைக்கவும். அவ்ளோதாங்க சிறிய அதவது Domestic
Bio Gas Plant ரெடி ஆகி விட்டது.
கையாளும்
முறை:
நாம்
தினமும் வீட்டில் சேகரிக்கப்படும் காய்கறி மற்றும் இதர மக்கும் தன்மை கொண்ட உணவு
கழிவுகள் எல்லாவற்றையும் அந்த பெரிய Drum ன் துளை
வழியாய் உள்ள போட வேண்டும். இவ்வாறு போடப்படும் கழிவுகள் நீருடன் கலந்து
நுண்ணுயிர்கள் மூலம் மக்கி அது வெளியேற்றப்படும் வாயு, மேலே உள்ள Drum இல்
சேகரிக்கப்பட்டு வைக்கப்படும். இந்த மேல இருக்கும் Drum ன்
மேற்பரப்பில் இருந்து ஒரு குழாய் மூலம், உருவான வாயுவை அதாவது Methane
Gas ஐ எடுத்து, சமைக்க பயன்படுத்தி கொள்ளலாம். நாம் இதில் போடப்படும்
திடக்கழிவுகள் சமையல் எரிவாயுவாக மாற 20 முதல் 25 நாள் வரை தேவைப்படும். அதற்கு
அப்பறம் இந்த சுழற்சி தானவாகவே தினமும் நடக்கும்.
அடுத்து
இன்னொரு துளையில் இருந்து வெளியே வரும் உபரிநீர் மிகவும் சத்து நிறைந்ததாக
இருக்கும். இது வீட்டில் வளர்க்கப்படும் செடிகளுக்கு ஒரு நல்ல உரமாக பயன்படும். அவ்ளோ தாங்க,
மிகவும் எளிய முறையில் Domestic Bio Gas Plant போட்டு அதில் இருந்து எரிவாயு
மற்றும் இயற்கை உரம் தயார்செஞ்சாச்சு. இது முற்றிலும் இயற்கை
முறையில் செய்யப்படுவதால் இந்த வகை உரத்திற்கு செடிகளை அதிக செழிப்புடன் வளர உதவி
செய்யும்.
என்னங்க கொடுத்த தகவல் பயனுள்ளதாக இருக்கா? இருந்தா Comment இல் சொல்லுங்க.
உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கும் தெரிய படுத்துங்க. உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால்
எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி
Comments
Post a Comment