வீட்டிலே எளிய முறையில் சூரிய ஒளி மின்சார அமைப்பை பொருத்துவது எப்படி? How to install solar energy system at home?
இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சுழல், மாசு எரிபொருள் சிக்கனம் என்பது மிகவும் இன்றியமையாதது. இவற்றை கடைபிடிக்க ஒரே வழி மரபு சாரா எரிசக்தி ஆகும். அது என்ன மரபு சாரா எரிசக்தி? அதாவது தொன்றுதொட்டு மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்துவது அனல் மின் நிலையம் அல்லது நீர் மின் நிலையம். இவற்றை தவிர்த்து, இந்த மரபு முறைகளை தவிர்த்து புதிய முறையில் மின்சாரம் தயாரிப்பதே மரபு சாரா எரிசக்தி ஆகும். இதிலும் பல்வேறு வகைகள் உண்டு. ஒன்று சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது. இன்னொன்று கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது இதனை Tidel Energyஎன்று குறிப்பிடுவதுண்டு. இன்னொன்று Geothermal அதாவது பூமிக்கடியில் கிடைக்கப்பெறும் வெப்பத்தை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வதே Geeothermal ஆகும். சூரிய ஒளி மின்சாரத்தி தவிர மற்ற இரண்டு தொழில்நுட்பத்திலும் மின்சார தயார் செய்வதற்கு அதிக Technology மற்றும் Infrastructure தேவை, மற்றும் முதலீடும் அதிகம். ஆனால் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயார் செய்வது என்பது மிகவும் எளிது. சிறிய Capacity முதல் பெரிய Power Plant வரை எளிதாக அமைத்துவிடலாம். மற்றுமல்லாமல் முதலீடும் குறைவு தான், மற்றும் செய்யப்பட்ட முதலீட்டை விரைவில் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். இதன் ROI என்பது மிகவும் குறைவு. சரி இதனை எப்படி எளிய முறையில் வீட்டிலே அமைப்பது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
முதலில் சூரிய ஒளி மின்சாரத்தை அமைக்க மிக முக்கியமான ஒன்று PV Panels ஆகும். அதாவது இந்த தகடுகள் Silicon என்னும் Semiconductor ஆல் செய்யப்படுகிறது. இந்த Silicon Semiconductor கள் ஒளி அதன் மேல் பட்டவுடன் அதனுள் இருக்கும் Electrons கள் நகர தொடங்குகிறது. இது வேகமா நகரும்போது மின்னோட்டம் ஏற்பட்டு, மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. ஒரு Panel என்பது பல்வேறு Cell ஆல் இணைக்கப்பட்டதாகும். இதில் வர்த்தகரீதியா இரண்டு வகை Panel கள் உண்டு. ஒன்று Monocrystalline மற்றொன்று Polycrystalline ஆகும். இதுவே பெரிய பெரிய மின் ஆலைகளில் பயன்படுத்தப்படுவது Thin Film Panels ஆகும். இவற்றில் அதிக திறன் வாய்ந்தது Monocrystalline உம் மிக கம்மி திறன்வாய்ந்தது Thin Film Panels ஆகும்.
இதன் திறன்கள் 10 சதவீதத்தில் இருந்து 18 வரை அதன் வகையை பொறுத்து மாறுபடும். பொதுவாக Domestic பயன்பாட்டிற்கு Polycrystalline வகை Panel களே உபயோகிக்கப்படும். சரி அடுத்ததாக இதன் Capacity எப்படி முடிவு செய்வது என்பது பார்ப்போம். முதலில் நமது வீட்டில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் எரிசக்தி பயன்பாடு அதாவது அதன் Power Consumption எவ்வளுவு Watts என்று கணக்கிட்டுக்கொள்ளவும். அதிக பயன்பாடு உள்ள உபகரணங்களின் Watts ஐ கணக்கிட்டு அதற்கு மேல் திறனுள்ள சோலார் System ஐ அமைக்க வேண்டும். ஏனென்றால் சூரிய ஒளி தகடுகள் அதன் Efficiency ஐ பொறுத்து அதன் Output Power மாறுபடும். எனவே அதிலுள்ள Losses ஐ சேர்த்து 20 % முதல் 23 % வரை அதிக திறனுள்ள System ஐ நிறுவவேண்டும். தற்போது இதிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று On Grid மற்றொன்று Off Grid ஆகும். Ongrid என்பது Battery இல்லாமலே உற்பத்தியாகும் ஆகும் மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்துவது, அல்லது மீதமுள்ள மின்சாரத்தை Grid கு செலுத்திவிடுவது. இந்த முறை System இல் Net Metering Concept படி மின்சார வாரியத்தில் இருந்து நாம் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவு மற்றும் நாம் மின்வாரியத்திற்கு திருப்பி கொடுத்த மின்சாரத்தின் அளவு இரண்டுமே கணக்கீடப்பட்டு Balance ஆ இருக்கும் Unit களுக்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும். இதற்கு மின் வாரியத்தில் இருந்து ஒரு NOC பெற்று Installation கு TEDA.GOV.IN என்னும் இணையத்தளத்தில் பதிந்து System Installer ஐ தேர்ந்து எடுத்து Apply செய்ய வேண்டும். அவ்வாறு Apply செய்த பின் அந்த நிறுவனம் உங்களை தொடர்பு கொண்டு Solar System ஐ இன்ஸ்டால் செய்து விடுவார்கள்.
இதுவே Offgrid என்றால் நாமாவாகவே இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் இதற்கு மின்வாரியத்தில் இருந்து NOC மட்டுமே தேவைப்படும். இந்த வகை System இல் நாம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமிக்கும் வசதி உண்டு. இதனை சேமிக்க Deep Cycle Solar Battery கள் பயன்படுத்தப்படும். உற்பத்தி ஆகும் மின்சாரம் இதில் சேமிக்கப்பட்டு பின்பு இதில் இருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு ஒரு Solar Inverter தேவைப்படும். உற்பத்தி ஆகும் ஆற்றல் DC Power ஆக இருக்கும். இந்த DC Power ஐ Regulate செய்து Battery களில் Store செய்து, பின்பு தேவை படும் பொழுது இந்த DC Power ஐ Inverter மூலம் AC Power ஆக கன்வெர்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
என்னங்க கொடுத்த தகவல் பயனுள்ளதாக இருந்ததா? நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு இதனை பகிரவும். உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும் நன்றி
Comments
Post a Comment