Personality Development என்றால் என்ன? அதை எப்படி மேம்படுத்துவது? What is Personality development and how to improve it?
Personality Development என்றால் ஆளுமைத்திறனை வளர்ப்பது அல்லது நமது குணங்கள் அதாவது Soft Skills போன்ற திறன்களை வளர்ப்பது. இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே கடும் போட்டிகளுடன் இருக்கிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிகளில் சேர அல்லது பணியினை தக்கவைத்து கொள்ள இந்த திறன்களை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும்.
முதலில் முக்கியமானது தோற்றம். முன்னோர்கள் சொன்னது தான், "ஆள் பாதி ஆடி பாதி" நவீன காலத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்றால் "Appearance makes impact" என்றே சொல்லலாம். எனவே நாம் ஏதும் நேர்காணலுக்கு செல்கிறோம் என்றால் நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். தோற்றம் என்றால் முகம், உடை என்று அனைத்துமே சொல்லலாம். நமது முகம் பார்ப்பதர்கு பொலிவுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும். பொலிவுடன் இருக்க முதலில் நன்கு தியானம் செய்வதற்கு பழகி கொள்ள வேண்டும். அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து மனதை ஒருமுக படுத்தி தியானம் செய்தாலே முகம் தெளிவு மற்றும் பொலிவு அடைந்து விடும். இரண்டாவது நமது உடை, அது மிகவும் Formal ஆ இருக்க வேண்டும். பொதுவாக நாம் மாநிறம் என்றால் Dark Color இல் Shirt உம் Light Color இல் Pant உம் அணிந்து இருந்தால் நல்லது. அதுவே சற்று நிறம் குறைவு என்றால் Light Color இல்Shirt உம் Dark Color இல் Pant உம் அணிந்து இருக்க வேண்டும். Shirt இல் எந்த வித Design உம் இல்லாமல் Plain ஆ இருந்தால் நன்றாக இருக்கும், அல்லது குறிகிய Checked Shirts அணியலாம். அடுத்தது Belt ரொம்பவும் Formal ஆன Belt அணிவது நல்லது. அடுத்து காலணி அதாவது Shoes இதுவும் Formal ஆக Plain ஆ இருந்தால் மிகவும் நல்லது. அவ்ளோதாங்க உடையில் தயார்.
அடுத்து நடை மற்றும் அணுகுமுறை. எப்பொழுதும் நிமிர்ந்த நடை மற்றும் கம்பீரமான நடை நடப்பது நமது மதிப்பை அதிகரிக்கும். அணுகுமுறை,இதில் நாம் ஒருவரை அணுகும்முன்பு தன்னம்பிக்கை உடன் அணுக வேண்டும். தன்னம்பிக்கை என்றால் பேச்சில் எந்த வித பிழை இல்லாமல் இருக்க வேண்டும் பேசும் பொழுது பார்வை எதிரில் இருப்பவருடன் கண்களை பார்த்து பேசுவது சிறந்தது, அதாவது Eye Contact, இப்படி பேசினாலே எதிரில் இருப்பவரை நாம் கவர்ந்து விடலாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுக்கு ஏற்றவாறு பார்வையிலேயே ஒருவரை கருவரும் வசியம் தெரிந்திருக்க வேண்டும். பேசும்பொழுது எந்தவித தடை இல்லாமல் சொல்ல வந்ததை மிகுந்த தெளிவுடன் சுருக்கமா சொல்வது நேர்காணலரை எளிதில் கவர்ந்து விடலாம்.
அடுத்தது Body Language, அதாவது நாம் பேசும் பொழுது நமது உடல் அசைவு எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பார்கள். பேசும்பொழுது கைகளை அசைத்து பேசுவதோ முகத்தை அங்கும் இங்கும் திருப்பி பேசுவதோ கூடாது. மிகவும் எளிமையாக சிரித்த முகத்துடன் உதடுகளால் மட்டுமே அசைவை வெளிப்படுத்த வேண்டும். அடுத்து Soft Skills அதாவது குணங்கள். இதில் முக்கியமாக பார்க்கப்படுவது மொழித்திறன். நமது மொழியில் எவ்வளுவு சரளமாக பிழை இல்லாமல் பேசுகிறோம் மற்றும் எவ்வாறு எதிரில் உள்ளவரை புரிய வைக்கிறோம் என்பது முக்கியம் நாம் மனதில் நினைத்தை தெளிவுடன் எதிரில் உள்ளவர் புரியும் படி அதே சமயம் சுருக்கமா வெளிப்படுத்த வேண்டும். மற்றும் Multi linguistic அதாவது பல மொழி தெரிந்தவருக்கு எப்பொழுதுமே முன்னுரிமை உண்டு.
அடுத்த மிக முக்கிய திறன் ஆளுமை திறன் இதில் நாம் மற்றவரை எப்படி அணுகுகிறோம், அவரை எப்படி நாம் கவர்கிறோம், அவருடன் எப்படி உரையாடுகிறோம், அவருடன் எப்படி முகபாவங்களை வெளிப்படுத்துகிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது. மற்றும் மற்றொருவருடன் நாம் எளிதில் Mingle ஆகி விடுகிறோமா என்பதும் கவனிக்கப்படும். சக ஊழியர்களுடன் சேர்ந்து பணியாற்றாவது என்பது ஒரு முக்கிய சவாலே.
இந்த பதிவின் தொடர்ச்சி வெளியாகும்
என்னங்க இந்த பதிவில் புதுசா ஏதும் தெரிஞ்சுகிட்டீங்களா? அப்படினா உங்கள் கருத்தை பகிருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்க. உங்களுக்கு ஏதேனும் கேள்வி மற்றும் சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இணைத்து இருங்கள்.
நன்றி
Comments
Post a Comment