Work Pressure, Stress, Tension என்று பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் கொஞ்ச Relax ஆ Weekend இல் பிடித்ததை சமைத்து உண்டு குடும்பத்துடன் மகிழ்வது அல்லது தனிமையாக விரும்பியதை சமைத்து உண்டு Weekend ஐ கழிப்பது எவ்வளுவு சுகமா இருக்கும்.
அப்படி இந்த Weekend ஐ கழிக்க ஒரு Recipe ஐ இந்த பதிவில் காண்போம்.
எல்லோருக்கும் அசைவம் என்றாலே நியாபகத்துக்கு வருவது பிரியாணி தான். அதுவும் Ambur
Briyani, Hyderabad Biriyani மற்றும் அங்கண்ணன் கடை பிரியாணி என்றாலே நாவில் எச்சில் ஊரும். சரி அப்படி உள்ள பிரியாணி ஐ Online இல் Order செய்யாமல், நமது கை பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால் எவ்வாறு இருக்கும்? நல்லாத்தான் இருக்கும், ஆனா எப்படி செய்வது? என்று தானே கேட்குறீங்க.
உங்களுக்காகவே இந்த பதிவு.
முதலில் சிக்கன் ஐ நன்றாக உப்புத்தண்ணியில் கழுவி அல்லது தண்ணீருடன் சிறிது உப்பு கலந்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் சிறிது உப்பு சிறிது மஞ்சள் தூள் மற்றும் சிறிது மிளகாய் தூள் சேர்த்து ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு 1 KG கறி என்றால் 100 gram இஞ்சி மற்றும் 50 gram பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். 100 gram வெங்காயம் (சின்ன அல்லது பெரிய வெங்காயம்) நன்றாக நறுக்கி கொள்ளவும்.
அத்துடன் பட்டை இரண்டு துண்டு, நான்கு கிராம்பு, இரண்டு அண்ணாச்சி பூ, சிறிது ரோஜா இதழ், சிறிது கடல் பாசி, ஒரு பிரிஞ்சு இலை மற்றும் ஒரு ஏலக்காய், சுத்தம் செய்து வைத்த புதினா இலை, சிறிது கசகசா எடுத்து வைத்து கொள்ளவும். முதலில் மேலே சொன்ன இந்த பட்ட கிராம்பு போன்றவற்றை சரி பாதியாக பிரித்து ஒரு பாதியை Mixie இல் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பின்பு ஒரு சிறிய நாட்டுத்தக்காளியை
சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
அவ்ளோதாங்க பிரியாணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார்.
இப்பொழுது Cooker இல் இரண்டு அல்லது மூன்று Spoon Refined Sunflower Oil ஐ ஊற்றி, தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். எண்ணெய் சூடானவுடன் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு கலவையை அதில் போட்டு வதக்கவும். பின்பு அதில் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பிரிஞ்சு இலை மற்றும் பட்டை கிராம்பு ரோஜா இதழ் கடற்பாசி இவற்றை சேர்த்து அத்துடன் அரைத்து வைத்த இவற்றின் கலவையை சேர்த்து நன்றாக வதங்கி கொள்ளவும்.
பின்பு நறுக்கி வைத்த தக்காளி, புதினா இலை மற்றும் சுத்தம் செய்து வைத்த கறி இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறி, சிறிது மிளகாய் தூள் மற்றும் இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் ஒரு Spoon மல்லித்தூள் சேர்த்து நன்றா கிளறவும். பின்பு கறியில் இருந்து எண்ணெய் பிரியும் வரை சிறிது நேரம் மூடி வைக்கவும். பின்பு அதில் கசகசாவை உள்ளங்கையில் நன்றாக கசக்கி சேர்த்து கழுவி வைத்த அரிசியை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி மூடி வைத்து விடவும். ஒரு 15 நிமிடம் வைத்து இறக்கவும். Steam போன உடன் Cooker ஐ திறந்து மேலே சிறிது நறுக்கி வைத்த மல்லித்தழை தூவி பரிமாறவும். சால்னா அல்லது ரைத்தா உடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதை ஒரு முறை சமைத்து சாப்பிட்டு விட்டால் இனிமேல் நீங்களே இதில் Expert ஆகிருவீங்க.
என்னங்க இன்றைய Recipe இன்றைக்கே சமைத்து சாப்பிட வேண்டும் என்று ஆசையா தூண்டுகிறதா? Comment இல் சொல்லுங்க.
மேலும் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும், அவர்களும் பயனடைவார்கள். உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
நன்றி
Comments
Post a Comment