பங்குச்சந்தையில்
முதலீடு செய்வதற்கு
முன் முதலில்
நிறுவனங்களையும் அதன் பிறகு, தொழில் பிரிவுகளையும் தெரிந்து
கொள்ள வேண்டும்.
பங்குச்சந்தையில்
பிரிவுகளை பற்றி
முதலில் பார்ப்போம்.
பங்குச்சந்தையில் Nifty, Bank Nifty, Nifty IT, Nifty Pharma என்று முக்கிய பிரிவுகள்
உள்ளது. ஒவ்வொரு
பிரிவுகளிலும் முன்னணி நிறுவனங்கள் இடம் பெற்று
இருக்கும். அந்த நிறுவனங்கள் பற்றி
Balance Sheet , P/L, Market Cap
அதன் எதிர்கால
மதிப்பீடு போன்றவற்றை
தெறிந்து கொள்ள
வேண்டும். பின்பு அதன் வளர்ச்சி
விகிதம் மற்றும்
வளர்ச்சி காலஅளவு
பற்றி தெரிந்து
கொள்ள வேண்டும்.
இதற்கு
நாம் முதலில்
நாம் செய்யும்
முதலீடு குறிகிய
கால முதலீடா
அல்லது நீண்ட
கால முதலீடா
என்று முடிவுசெய்து
கொள்ள வேண்டும்.
இதற்கு
நாம் முதலில்
தொழில் மற்றும்
நடப்பு சந்தை
தேவை அதாவது
Market Gap என்ன வென்று
தெரிந்து வைத்திருக்க
வேண்டும். குறிகிய
கால முதலீடு
செய்வது என்றால்
முதலில் பங்குச்சந்தையில்
இடம் பெற்று
இருக்கும் நிறுவனங்கள்
பற்றி தெரிந்து
வைத்திருக்க வேண்டும். அந்த நிறுவனத்தின்
எதிர்காலத்திட்டங்கள் தொழில் கொள்கை
போன்றவற்றை தெரிந்து வைத்து பட்டியலிட வேண்டும்.
பின்பு
அந்த பட்டியலை
ஆராய்ந்து குறும்பட்டியல்
அதாவது Short List செய்ய வேண்டும்.
ஒவ்வொரு
நிறுவனத்தின் கொள்கை மற்றும் சந்தை மதிப்பு
மற்றும் திட்டங்கள்
பொறுத்து அதன்
வளர்ச்சி விகிதம்
அல்லது பங்குகளின்
வளர்ச்சி விகிதம்
மாறுபடும். இதில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி
விகிதம் மற்றும்
வளர்ச்சி கால
அளவு பொறுத்து
தேர்ந்துஎடுத்து முதலீடு செய்ய வேண்டும். குறிகிய
கால முதலீடு
என்பது பொதுவாக
ஒன்றில் இருந்து
மூன்று மாதம்
கால அளவு.
எந்தெந்த
நிறுவனங்கள் இந்த குறிகிய காலத்தில் அதிக
லாபத்தை ஈட்டி
தருகிறதோ அந்த
அந்த நிறுவனங்களை
தேர்ந்துஎடுத்து செய்வது சரியான முதலீடு முறை.
அடுத்ததாக
நாம பார்க்க
போவது நீண்ட
கால முதலீடு.
இந்த நீண்ட
கால முதலீட்டில்
கால அளவு
ஒன்பது மாதத்தில்
இருந்து ஒரு
வருடம் வரை.
இது
போன்ற முதலீட்டுகளில்
முக்கியமாக கவனிக்க வேண்டியது நிறுவனங்கள் அல்ல
துறைகள் தான்.
அடுத்த
ஒன்றில் இருந்து
மூன்று வருட
காலத்தில் எந்தெந்த
துறை அதிக
வளர்ச்சி பெரும்
என்று ஆராய்ந்து
அந்த துறையில் சிறந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய
வேண்டும். நமது Blog இல் எதிர்காலத்தில் எந்தெந்த தொழில்கள்
வளர்ச்சி பெரும்
என்று பதிவு
செய்து இருக்கிறோம்.
அதை
பார்த்து அதில்
முதலீடு செய்ய
வேண்டும். உதாரணமாக
எதிர்காலத்தில் EV’s அதாவது
Electric Vehicles களுக்கு
அதிக சந்தை
மதிப்பு மற்றும்
விற்பனை இருக்கும்.
எனவே
இந்த பங்குகள்
அதிக லாபத்தை
ஈட்டி தரும்
என்று எதிர்பார்க்கலாம்.
துறையை
தேர்ந்து செய்த
பின்பு அந்த
துறையில் உள்ள
நிறுவனங்களை பட்டியலிட வேண்டும். பின்பு அந்த
நிறுவனங்களின் சந்தை வளர்ச்சி அதாவது Growth Rate ஐ பொறுத்து நிறுவனத்தை
தேர்வு செய்து
முதலீடு செய்ய
வேண்டும். இவ்வாறு
முதலீடு செய்தால்
நமது முதலீட்டிற்கு
ஏற்ற லாபம்
கிடைக்கும். எனினும்
Risk Factor ஐ ஆராய்ந்து
முதலீடு செய்வது
சாமர்த்தியம்.
என்னங்க
இன்றைய தகவல்
பயனுள்ளதா இருந்ததா?
இருந்தா உங்கள்
கருத்தை பகிரவும்.
உங்களுக்கு
ஏதேனும் கேள்வி
அல்லது சந்தேகம்
இருந்தால் எங்களை
தொடர்பு கொள்ளவும்.
விருப்பப்பட்டால்
உங்கள் நண்பர்
மற்றும் உறவினர்களுக்கு
பகிரவும்.
நன்றி
Comments
Post a Comment