Fire Bricks என்றால் என்ன? Cupola Bricks என்றால் என்ன? Refractory Bricks என்றால் என்ன? Furnace இல் எவ்வாறு பயன்படுகிறது ?What is Fire Bricks, Cupola Bricks and Refractory Bricks? Where and how it is applied in Furnace;
Fire Bricks என்பது வெப்ப ஆற்றலை சேமிக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருள். அது எப்படி சேமிப்பது என்று பார்ப்போம். முதலில் இதை எங்கு பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம். இது Boilers மற்றும் Furnace மற்றும் Owen களில் பயன்படுகிறது. Boiler இன் Firing Chamber இல் உள்ள வெப்ப அளவு 100 deg C கு மேல் இருக்கும். அதுவே Furnace ஐ எடுத்து கொண்டால் ஒவ்வொரு உலோகத்தின் Melting Point ஐ பொறுத்து அதன் வெப்ப நிலை 500 deg C முதல் தொடங்கி 1500 deg C வரை கூட இருக்கும். இவ்வளுவு அதிக வெப்பம் பக்கத்தில் நின்று பணி ஆற்றுவது என்பது ஒரு கடினமான / முடியாத செயல். அது மட்டுமல்லாமல் இவ்வளுவு அதிக வெப்ப ஆற்றலை கொண்டு வர அதிக எரிசக்தியும் பயன்படும். இதன் எரிபொருள் பயன்பாட்டை 35 முதல் 50 சதவீதம் குறைப்பதே இதன் முக்கிய பயன்பாடு.
இதில் பல்வேறு Grade
கள் இருக்கிறது. நமது பயன்பாட்டை பொறுத்து இதன் Grade கள் மாறுபடும்.
BIS அதாவது Bureau of
Indian Standards இந்த வகை கற்களுக்கு IS 6m IS 8 என்று இரண்டு முக்கிய Standard களும் அதற்கு மேல் உள்ள Grade களுக்கு High
Alumina Bricks என்றும் பட்டியலிட்டுஇருக்கிறது. இந்த கற்கள் செவ்வகம் அதாங்க Rectangular
Shape+ யிலும் Semi Circular
அதாவது அரைவட்டம் வடிவிலும் வருகிறது. இந்த வகை கற்களை தயாரிக்க பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்படும்
சில அறிய வகை தாதுப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த கனிமங்களுக்கு இயற்கையாகவே அதிக வெப்பத்தை கடத்தா தன்மை கொண்டது. இதனால் உருவாக்கப்படும்
ஆற்றல் Energy Loss ஆவதில் இருந்து தவிர்க்கப்படுகிறது. இதனாலே எரிபொருள் சிக்கனம் ஆகிறது.
அப்படி என்னங்க 1800 deg C வரை தாங்கக்கூடிய
கனிமங்கள் என்று தானே கேட்கிறீர்கள்? ஆமாங்க இதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய தாதுப்பொருள்
Alumina மற்றும் Silica ஆகும். இந்த தாதுப்பொருட்களை இதர சில தாதுக்கள் சேர்த்து இந்த வகை கற்கள் வார்த்து எடுக்க படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த வகை கற்கள் 1800 deg C வரை வெப்ப நிலையில் வேகவைப்பதால் இதற்கு அதிக வெப்பத்தை தாங்கும் சக்தி கிடைக்கிறது. இந்த கற்கள் அதன் பயன்பாடு மற்றும் அதன் Grade பொறுத்து, அதன் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படும். சிறந்த Grade இல் Indian Standard
ஐ பின்பற்றி செய்யப்படும்
கற்களுக்கு அதன் ஆயுட்காலம் சற்று கூடுதலாக இருக்கும்.
இந்த வகை கற்களை தேர்ந்து எடுக்க அதனுள் கலக்கப்படும் தாதுப்பொருட்கள் அளவை பொறுத்து அதாவது அதன் Ratio பொறுத்து அதன் Quality வேறுபாடும்.
இந்த வகை கற்களை தேர்ந்துஎடுக்க முதலில் கவனிக்கப்படவேண்டியவை தாதுப்பொருள்
அளவு Ratio அடுத்து அதன் Compressive
Strength. இந்த இரன்டு Parameter களும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.
அடுத்து இது பயன்படுத்தப்படும் Furnace ஐ பொறுத்து இதன் Shape மாறுபடும். Normal
உலோகங்கள் உருகப்படும் Furnace இற்கு செவ்வகம் வடிவிலும் Cupola போன்ற Furnace
களுக்கு அரைவட்ட வடிவிலும் இருக்கும். இந்த அரைவட்ட கற்களுக்கு Cupola Fire Bricks என்று ஆங்கிலத்தில் பெயருண்டு.
என்னங்க இன்னைக்கும் புதுசா ஏதும் தெரிஞ்சுக்கிடீங்களா? அப்படினா Comment இல் உங்கள் கருத்தை பகிருங்கள். உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். இந்த தகவல் பயனுள்ளதா இருந்த உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்.
நன்றி
Comments
Post a Comment