2022 இல் வெளியான தலை சிறந்த Technical Inventions; புதிதாக வெளிவந்து உள்ள Gadget கள். Top inventions made on 2022; New gadgets on 2022
2022 இல் வெளியான தலை சிறந்த Technical Inventions பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் Corona Tester / Breathe Analyzer. இந்த Tester
ஐ Corona மற்றும் வேறு அனைத்து விதமான Infectious கிருமிகளை கண்டுபிடிக்க கூடிய கை அடக்க கருவி. பொதுவாக ஏதும் Test என்றாலே ரத்த மாதிரி, சளி மாதிரி, சிறுநீர் மாதிரி இவற்றை கொண்டு Lab இல் ஆராய்ந்து Report
வர குறைந்தது இரண்டு மணி நேரம் ஆவது ஆகும். அனால் இந்த கை அடக்க கருவியில் உடனடியாக கண்டுபிடித்து விடலாம். இது ஒரு கை அடக்க கருவி என்பதால் இதனை எளிதில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று பயன்படுத்தலாம். இந்த கருவி அமெரிக்கா வில் உள்ள George Mason University இல் பரிசோதனை செய்யப்பட்டு Corona தொற்றை மிக துல்லியமாக கண்டுபிடிக்கக்கூடியது என்று சான்றுஅளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த படைப்பு Humanoid Robot. அதாவது மனித செயல் Robot கள். இந்த வகை ரோபோக்கள் மனிதர்களை போன்று பணியாற்றுவது மட்டுமின்றி இதன் முகபாவங்கள் மற்றும் கண் அசைவுகளும் மனிதர்களை போன்றதே இருப்பது இதன் சிறப்பம்சம். இந்த வகை ரோபோக்களுக்கு Ameca என்று பெயரிடப்பட்டுள்ளது, மற்றும் இப்பொழுது இதனை மனிதர்களுடன் சரிசமாக உரையாடும் அளவிற்கு நவீனப்படுத்தி உள்ளார்கள். எனவே இந்த வகை ரோபோக்களை எதிர்காலத்தில் Customer Service, Automatic Teller, Ticket Counter போன்ற இடங்களில் பணியமர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வெளியீடு Foldable Gadget. முதலில் Azus இல் Zenbook 17 Fold என்ற Gadget
வெளியிட பட்டுள்ளது. இதன் Screen
அளவு 17.3” ஆகும். இந்த Gadget
ஐ Laptop ஆகவோ Computer ஆகவோ Tablet
ஆகவோ பயன்படுத்தி கொள்ளலாம். தேவை என்றால் இதனை ஒரு Bluetooth Keyboard உடன் சேர்த்து Projecting Screen போலவும் பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது இதன் ஒரு பகுதியை ஐயே Touch Keypad போன்று பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த Gadget OLED Screen மற்றும் HDR மற்றும் Dolby Processor உடன் வருகிறது. இது எளிதாக மடக்கி விடலாம் என்பதனால் இது Carry செய்ய மிகவும் எளிது.
அடுத்தகண்டுபிடிப்பு Color Changing Cars. என்னது Car கள் நிறம் மாறுமா? ஆமாங்க BMW இல் அப்படி ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இந்த வகை Car கள் அதன் வெளி புற Body இல் Electropheuratic என்னும் தொழில்நுட்பத்தில் வடிமைத்துள்ளார்கள்.
இந்த தொழில்நுட்பத்தில் Body ன் மேற்பரப்பில் Microcapsules அதாவது நுண்துகழிகளை பூசியுள்ளார்கள். எனவே ஒரே ஒரு Button
ஐ அழுத்தினால் Particles
Charge அடைந்து இதன் நிறம் கருப்பாக இருந்தா வெள்ளையாகவோ வெள்ளையாக இருந்தால் கறுப்பாகவோ மாற்றிவிடலாம். நாம் விரும்பும் வண்ணம் இதன் நிறத்தை மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம் செலவுஇல்லாமல்.
அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது Digital Twins. அதாவது ஒரு பொருள் நிஜத்தில் வெளிவருவதற்கு முன்பே Computer இல் CAD மூலம் இதன் செயல்திறனை ஆராய்ந்து பார்ப்பது. உதாரணமாக KTM இல் புதுசா ஒரு Bike வரவிருக்கிறது என்று வைத்து கொள்வோம். முதலில் இதை இந்த Software இல் முழு Operation ஐயும் Simulate செய்து பார்த்து இதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா, இதில் வேறு ஏதும் மேம்படுத்தவேண்டியுள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம். நிஜத்தில் வெளியிடாமலே இதன் அனைத்து செயல்பாடுகளையும் இந்த Simulation இல் தெறிந்து கொள்ளலாம். இந்த சிறம்பம்சம் என்னவென்றால் இந்த Simulation மற்ற வகை Simulation ஒப்பிடுகையில் அதிக வேகமாவாகும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட Simulations களை செய்து விடலாம் என்பது தான்.
அடுத்த கண்டுபிடிப்பு Body Health Scanner. இந்த வகை Scanner கள் மிகவும் கை அடக்கமாகவும் எளிதில் எங்கும் கொண்டு செல்லலாம். இந்த வகை Scanner
களில் நமது உடல் எடை, இதய துடிப்பின் அளவு நமது தசைகளின் வயது மற்றும் மூட்டுத்தசைகளின் வலிமை அதன் தற்போதைய நிலைமை என்று அனைத்துமே பார்த்துவிடலாம்.
அடுத்த கண்டுபிடிப்பு Flying Vehicles. இந்த வகை வாகனங்களை Skydrive என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வகை Vehicles எதிர்காலத்தில் பொருட்களை Delivery செய்ய பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தா இடத்தில இருந்ததே 400 m முதல் 500 m உயரம் வரை சென்று, 500 kg
எடை கொண்ட பொருட்களை ஏற்றி கொண்டு பறக்கத்தக்கது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 km ஆகும். எனவே எதிர்காலத்தில் Online Shopping and Delivery Company கள் இந்த வகை வாகனங்களை பயன்படுத்தும் என்பது சந்தேகம் இல்லை.
என்னங்க இந்த பதிவில் புதுசா ஏதும் தெரிஞ்சுகிட்டீங்களா? அப்படினா உங்கள் கருத்தை பகிருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்க. உங்களுக்கு ஏதேனும் கேள்வி மற்றும் சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இணைத்து இருங்கள்.
நன்றி
Comments
Post a Comment