UPI என்றால் என்ன? அதை கொண்டு எவ்வாறு பாதுகாப்பாக பணப்பரிவர்த்தனை செய்யலாம்?What is UPI? How we can make use of it for money transaction safely?
UPI என்றால் என்ன?
UPI என்றால் Unified Payment Interface ஆகும். பொதுவாக நாம் இன்று சில்லறை வணிகத்திலும்
Online Payment முறையை கையாளுகிறோம். அதற்கு பல்வேறு Payment
App கள் வந்து விட்டது. உதாரணமாக PhonePay, GooglePay, PAYTM என்று பல்வேறு புதிய புதிய Payment App கள் வந்து கொன்டே தான் இருக்கின்றது. ஐந்து ரூபாய் முதல் ஐம்பது ஆயிரம் ரூபாய் வரையில் கூட இதில் பரிவர்த்தனை நடக்கின்றது. பெட்டிக்கடை முதல் பெரிய துணி கடைகள் முதல் இதனை பயன்படுத்திகிறார்கள்.
இதில் Payment செய்வதற்கு நமக்கு QR Code ஓ அல்லது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட Mobile என்னோ நமக்கு தேவை. நமது Payment App
இல் அந்த QR Code ஐ Scan செய்தோ அல்லது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட Mobile எண்னை Enter செய்தோ பணப்பரிவர்த்தனை செய்யலாம்.
இந்த Payment முறைக்கு பின்னோடியாக செயல்படுவது BHIM அல்லது UPI என்னும் Payment
Gateway தான்.
சரி இது எதற்கு நமக்கு என்ற கேள்வி வருகிறது அல்லவா? நாம் எந்த வித App களும் இல்லாமலேயே Payment ஆ நமது வங்கி கணக்கில் இருந்து
Direct ஆ பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். அது எப்படி என்று பார்க்கலாம் முதலில் நமது வங்கி அளிக்கும் App ஐ Play Store இல் இருந்து Download செய்து
Install செய்து கொள்ள வேண்டும். பின்பு அதற்கு தேவையான பயனீட்டாரலின் பெயர் அதாங்க Username கொடுத்து மற்றும் கடவுச்சொல் அதாங்க Password கொடுத்து Login செய்து கொள்ளவும்.
இதில் Open ஆகும் Window வில் Scan இற்கான குறியீட்டிச்சு சின்னம் (Symbol)
இருக்கும். அதை Click செய்து நமக்கு வேண்டிய QR Code ஐ Scan செய்து Payment ஐ அனுப்பி கொள்ளலாம். இந்த முறையில் நாம் Payment ஐ அனுப்பவும் முடியும் பெறவும் முடியும்.
இதில் UPI Id என்று ஒன்று கிடைக்கும். அந்த Id பொதுவாக நமது Email Id உடன் வங்கியின் சுருக்க பெயரும் இருக்கும்.
உதாரணமாக நீங்கள் KVB Bank இல் வங்கி கணக்கை வைத்து இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம், உங்கள் Email Id rajesh@gmail.com என்று வைத்து கொள்வோம். இப்பொழுது உங்களுக்கான UPI
Id "rajesh@kvb" என்று இருக்கும். உங்களுக்கு யாரேனும் பணம் அனுப்ப முற்படுகிரகள் என்றால் இந்த UPI Id ஐ கொடுத்தால் அவர்கள் Bank Payment App இல் இந்த UPI Id ஐ Type செய்து அனுப்பப்படும் தொகையை Enter செய்து Ok கொடுத்தால் உடனடியாக பணப்பரிவர்த்தனை ஆகிவிடும்.
இதுவே உங்களுக்கு உங்கள் நண்பர் பணம் தர வேண்டும் என்று வைத்து கொள்வோம். இப்பொழுது உங்களது வங்கியின் App இல் இருந்து உங்களது நண்பரின் UPI Id ஐ Enter செய்து உங்களக்கு வேண்டிய தொகையை அதில் Enter செய்து Request என்று கொடுத்தால் உங்கள் நண்பரின் வங்கியிற்கு, அதாங்க உங்கள் நண்பரின் வங்கி App இற்கு அந்த Request சென்று விடும். இப்பொழுது உங்கள் நண்பர் இதை பார்த்து அவரது App இல் Approve Payment என்று கொடுத்தால் உடனடியாக உங்கள் App இற்கு அதாங்க வங்கி கணக்கிற்கு பணம் வந்து விடும். நீங்கள் யாருக்கும்
Payment அனுப்ப வேண்டும் என்றால், அவர்களது UPI Id ஐ Type செய்து Send கொடுத்தால் அவர்களது வங்கி கணக்கிற்கு உடனடியா பணம் சென்று விடும்.
இதனால் என்ன பயன் என்று பார்த்தால் இந்த முறையில் ஒரு ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கூட பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். சரி இதனால் என்ன சிறப்பு என்று பார்த்தால் இதில் செய்யப்படும் பணப்பரிவர்த்தனை யாவும் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும், ஏன் என்றால் இதில் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு
MPIN கொடுத்து செய்வதால் இதை யாரும் எளிதில் Hack செய்ய முடியாது.
என்னங்க தகவல் பயனுள்ளதா இருக்கா? இருந்த Comment பண்ணுங்க Like பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கும்
Share பண்ணுங்க. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். மேலும் இது போல பல புதிய தகவல்களை தெரிந்து கொள்ள இனைந்து இருங்கள்.
நன்றி
Comments
Post a Comment