இயற்கை மூலிகை சூப் வகைகள் உடல் ஆரோகியத்திற்கு எவ்வாறு பயன்படுகிறது? Types of Natural, Herbal soups for healthy body
Daily வேலை, டெக்னாலஜி, Culture, Society என அலுத்து போய் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், நமது உடம்பையும் கவனித்து கொள்ள சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். சுவர் இருந்த தானே சித்திரம் வரைய முடியும்? கல் இருந்தால் தானே சிலையை செதுக்க முடியும்? எனவே நமது உடம்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக நமது உணவு பழக்கவழக்கங்கள் இன்று Fast Food, Pizza, Burger என்று உடம்புக்கு உகாத உணவை உண்கிறோம்.
இதனால் நமது உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், மனதையும் சோர்வாகிவிடுகிறது. உடலையும் எப்பொழுதும் ஆரோக்கியகமாகவும், மனதை எப்போதும் புத்துணர்வோடும் வைத்து கொள்ள வேண்டும். அப்படி உடலும் மனதும் புத்துணர்வோடு இருக்க சில உணவு முறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.
பொதுவாக நாம் உறங்கும் போது தான் நமது உடலுறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும். உடலில் ஏதும் வேறுபாடு ஒ அல்லது மாற்றங்களோ இருந்தால் நாம் உறங்கும் போது நமது உடம்பு அதுவாகவே சமன்படுத்தி கொள்ளும். இதனாலே எந்த ஒரு பத்திய உணவோ, மருந்தோ காலை எழுந்த உடன் வெறும் வயதில் சாப்பிட சொல்கிறார்கள். தூங்கி எழுந்த உடன் உடல் எந்த சமன்பாட்டில் இருக்கிறதோ, அதையே சமன்பாட்டில் தக்கவைத்துக்கொள்ள
தான் வெறும் வயிற்றில் சாப்பிட சொல்கிறார்கள். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட கூடிய உணவே மருந்தாகிய சில சூப் வகைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.
முதலில் முடக்கத்தான் கீரை சூப் பற்றி பார்ப்போம்.
இந்த முடக்கத்தான் கீரை சூப் உடல் வலி, கை கால் வலி, தோள்பட்டை வலி, மூட்டு வலி, உடம்பு அசதி போன்ற வற்றில் இருந்து மீள மிகவும் உதவும். அது மட்டுல்லாமல் இது உடம்பில் இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை சுத்திகரித்து ரத்தத்தை தூய்மையாக வைத்து கொள்ள உதவுகிறது. இவ்ளோ சிறப்பு இருக்கிறதா? சரி அந்த கீரை எங்கு கிடைக்கும்? இந்த கீரை பெரும்பாலும் விவசாய நிலங்களின் அருகிலோ அல்லது தண்ணீர் வளம் இருக்கின்ற கரிசல் அதாவது களிமண் பூமியிலோ வளரக்கூடியது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் இலை தண்டு இரண்டுமே மருத்துவகுணம் வாய்ந்தது. சரி இந்த கீரையை எப்படி சூப் செய்வது என்று பார்ப்போம். முதலில் பறித்த இந்த கீரையை நன்றாக நீரில் கழுவி கொள்ளவும். பின்பு இந்த கீரை மற்றும் தண்டு இரண்டையும் சேர்த்து ஒரு சிறிய உரலில் போட்டு நன்கு மசித்து கொள்ளவும். மசித்த இந்த கீரையை ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி இந்த கீரையை அதனுல் போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின்பு இதனுடன் சிறிது அளவு இஞ்சியை நன்றாக கை உரலில் இடித்து அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். மற்றும் இதனுடன் சிறிது தக்காளி, சிறிது வெங்காயம் போட்டு நன்றாக இடித்து கொதிக்கும் அந்த நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடவும். ஊற்றிய தண்ணீர் பாதி அளவு சுண்டும் வரை கொதிக்க விட்டு சிறிது உப்பு கலந்து இறக்கவும்.
அவ்ளோதாங்க சுவையான முடக்கத்தான் கீரை சூப் ரெடி ஆகிருச்சு.
இதில் இன்னும் சுவை கூட விரும்புவார்கள் இதனுடன் பொடியாக நொறுக்கிய முறுக்கு அல்லது சோள பொறிகளை சேர்த்து பரிமாறி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். மாறுபட்ட சுவையை விரும்புவார்கள் இதில் இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சைச்சாற்றை
கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
அடுத்து நாம் பார்க்க கூடிய சூப் முருங்கைக்கீரை சூப். இது உடல் அசதி உடல் சோர்வு தூக்கமின்மை போன்ற அசவுரியங்களை களைந்து உடம்பை தெம்பாக வைத்து கொள்ள உதவும். இதை செய்ய நமக்கு தேவையானது முருங்கைக்கீரை, வரமிளகாய்,
ஒரு பல் பூண்டு, சிறிது எண்ணெய், கடுகு, வெங்காயம் மற்றும் மிளகுத்தூள்.
முதலில் முருங்கைக்கீரையை நன்றா கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்பு முருங்கை இலை உடன் பூண்டு வரமிளகாய் போன்றவற்றை கை உரலில் போட்டு நன்றாக இடித்து ஒரு பாத்திரத்தில் பாதி அளவு நீர் ஊற்றி அதனுள் இந்த கலவையை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். தேவை பட்டால் சிறிது தக்காளியை யும் சேர்த்து கொள்ளலாம். ஊற்றிய நீர் பாதியாக குறையும் அளவு வரை கொதிக்க விட்டு இறக்கவும். பின்பு ஒரு வானொலியில் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் கடுகை போட்டு, கடுகு பொரிந்தவுடன் வடிகட்டிய இந்த நீரை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் அடுப்பை Sim இல் வைத்து இறக்கவும். இப்பொழுது நமக்கு சுவையான முருங்கைக்கீரை சூப் தயார். தேவை பட்டால் மிளகு தூள் சேர்த்து சுவைக்கலாம்.
அடுத்து நாம் பார்க்க கூடிய சூப் அகத்தி கீரை சூப். இதையும் வழக்கம் போல, அகத்திக்கீரையை நன்றாக சுத்தம்செய்து கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு சுத்தம்செய்த கீரையுடன் சிறிது இஞ்சி மற்றும் அரை தக்காளி பழம் சேர்த்து கை உரலில் நன்று இடித்து கொள்ளவும். பின்பு இடித்த இந்த கலவையை கொதிக்கும் நீரில் போட்டு தண்ணீர் பாதி அளவு சுண்டும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பருகினால் மிகவும் ருசியாக இருக்கும்.
என்னங்க வித்தியாசமான Recipes ஏதும் தெரிஞ்சுக்கிட்டீங்களா? அப்படினா உங்கள் கருத்தை பகிருங்கள். இது உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
நன்றி
Comments
Post a Comment