கோவையில் உள்ள பார்க்க வேண்டிய கோவில் தளங்கள்.
21st Century நவீன உலகம் Culture Modern என்று Busy ஆக இருக்கும் இந்த காலகட்டத்தில் சற்று இளைப்பாற மனதை புத்துணர்ச்சி ஆகி கொள்ள சிறிது ஓய்வு அல்லது பயணம் தேவை. Office வேலை என்று Busy ஆனா Schedule லில் மனதுக்கு Relax ஆ எங்கையாச்சும் வெளில போய்ட்டு வந்தா கொஞ்ச Comfort அ இருக்குமே. அப்படி பட்டவர்களுக்கு கோவையில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்
முதலில் கோவை என்றாலே நமது நினைவுக்கு வருவது பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தான். இந்த கோவில் இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழன் ஆல் கட்டப்பட்டது. இங்கு சிவபெருமான் சுயம்புவாக தோன்றியதாகவும், பச்சைநாயகி உடன் சேர்ந்தே காட்சியளிக்கிறார். இந்த ஸ்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் ஆல்
தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலமாகும். இந்த கோயில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பங்குனி
உத்திர தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்த
கோவிலில் பட்டி விநாயகர் சிலை மிகவும் சிறப்புவாய்ந்தது. அது
மட்டும் அல்லாமல் சரஸ்வதி தேவி வீணையுடன் காட்சியளிப்பது இந்த கோவிலில்தான்.
இரண்டாவது முக்கிய கோவில் என்று பார்த்தால் மருதமலை சுப்ரமணிய சுவாமி
திருக்கோவில் ஆகும். இந்த கோவிலில் முருகப்பெருமான் மருதாச்சலமூர்த்தி என்னும்
பெயரால் அழைக்கப்படுகிறார் இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கோவில்
ஆகும். இது முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது இந்த கோவிலில்
பாம்பாட்டி சித்தர் எனப்படுவருக்கு ஒரு சந்நிதியும், இந்த
கோவிலில் முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தர்க்கு பாம்பு வடிவில்
காட்சிஅளித்தாகவும் பின்பு வள்ளி தெய்வானை உடன் கட்சி அளித்து அருள் புரிந்தார்
என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலில் பாம்பாட்டி சித்தர் சந்நிதியில் இருந்து
முருகப்பெருமான் சந்நிதிக்கு ஒரு ரகசிய குகை வழி ஒன்று இருந்ததாகவும் பாம்பாட்டி
சித்தர் இந்த குகை வழியாய் சென்று முருகப் பெருமானை தரிசித்தாகவும் கூறப்படுகிறது.
மூன்றாவது சிறப்பு பெற்ற கோவில் கோவை கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வர்
கோவிலாகும். இந்த கோவில் 8 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்டது ஆகும். இந்த
ஸ்தலத்திற்கு என்று ஒரு புராண கதை கூறப்படுகிறது. அதாவது மார்க்கண்டேயன் என்பவருக்கு 16 வருஷம் தான் ஆயுள் காலம்
ஆம் எனவே அவரது தந்தை மிகுந்து வருத்தம் அடைந்தாராம். இதை
கவனித்த மார்க்கண்டேயன் அவரது தந்தையின் கவலையை நீக்க தனது ஆயுளின் கடைசி நாளன்று
திருக்கடையூர் இல் உள்ள சிவன் சன்னதியில் தஞ்சம் அடைந்து, அங்குள்ள சிவ லிங்கத்தை
பற்றிக்கொண்டார். இதை கண்ட எமன் மார்க்கண்டேயனை பிடித்து இழுத்து உள்ளார். இதனால்
கோவம் அடைந்த சிவா பெருமான் எமனை சபித்து உள்ளார். தனது சாபத்தை போக்க
எமராஜா கௌசிகா நதி கரையில் கோபத்துடன் தனது கையில் உள்ள கோளை வைத்து பூமியை
பிளந்துள்ளார். அப்பொழுது அதில் இருந்து வெளி வந்த நீரில் சிறிது மண்ணையும் கலந்து
எமராஜா சிவா லிங்கத்தை செய்து பூஜித்து பாவ விமோச்சனம் பெற்றாராம். பின்பு
விஸ்வாமித்திர முனிவர் அந்த சிவலிங்கத்தை சுற்றி ஒரு சிறிய கோவில் எழுப்பி பூஜை
செய்து வந்தார் என்றும் பின்பு நாளடைவில் அதையே இடத்தில சோழ மன்னரால் கோவில்
எழுப்பப்பெற்றது என்று புராணம் கூறுகிறது.
அடுத்து கோவையில் உள்ள மிக முக்கியமான ஒரு ஸ்தலம் ஈஷா யோகா மையம் ஆகும். இது கோவையில் இருந்து சிறுவாணி சாலையில் சுமார் 30k m தூரத்தில் வெள்ளிங்கிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த மையத்தின் சிறப்பு இரண்டு விஷயம் ஆகும். ஒன்று இங்கு உள்ள பாதரச குளம் ஆகும். இந்த மையத்திற்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் முதலில் இந்த குளத்தில் நீராடிவிட்டு தான் செல்ல வேண்டுமாம். உடம்பில் காயங்களோ கீறல்களோ இருந்தால் இந்த குளத்தில் இறங்க அனுமதி இல்லை. இந்த குளத்தில் நீராடினால் ஒரு வித Positive Energy கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இரண்டாவது இங்கு அமைந்து உள்ள Pyramid ஆகும். இந்த Pyramid குள் அமர்ந்து தியானம் செய்வது மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சி அளிக்கும்.
இந்த ஸ்தலத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் என்றல் இந்த ஸ்தலத்தின் முகப்பில் எழுப்பப்பெற்று உள்ள ஆதியோகி சிலை ஆகும். சிவராத்திரி அன்று இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. என்னங்க கோவை கு கிளம்ப தயார் ஆகிடீங்களா? இந்த இடங்களை Miss பண்ணாம பாருங்க. மேலும் இன்னும் பல இடங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம், அதுவரை இணைந்து இருங்கள். உங்களுக்கு ஏதாயினும் சந்தேகம் உதவி என்றல் எங்களை
தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி
Comments
Post a Comment