PVC Aadhar Card ஐ எப்படி பெறுவது என்று இந்த பதிவில் காண்போம்.
இன்றைய காலகட்டத்தில் Aadhar Card என்பது எல்லாவற்றிக்கும் இன்றியமையாத ஒன்றாகும். பிறந்த குழந்தை முதல் இறந்து போன முதியவர் வரை அனைவருக்கும் தேவை ஆன ஒன்று. ஸ்கூல் அட்மிஷன் இல் இருந்து Crematorium புக்கிங் வரை அனைத்திற்கும் Aadhar Number தேவை ஆன ஒன்று. இந்திய அரசாங்கத்தின் வாக்கியத்தின் படி Aadhar என்பது தனி மனித அடையாளம். பிற்காலத்தில் ஒரே ஒரு எண்னை கொண்டு தனி மனிதன் பற்றி அணைத்து தகவல்களும் தெரிந்து கொள்ளலாம். பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு கட்டங்களில் நமக்கு Aadhar தேவை படும். அப்படி பட்ட ஆதார் அடையாள அட்டையை பாதுகாப்பாக வைக்க வேண்டும் அல்லவா? தற்பொழுது உள்ள ஆதார் அட்டை Laminated Paper ஆல் ஆனது. இதனால் இது எளிதில் கிழிந்து விடும். இதற்காகவே இந்திய அரசாங்கம் PVC இல் ஆன ஆதார் அட்டையை வெளியீட்டுள்ளது. இந்த PVC இல் ஆன ஆதார் ஆடையை பெறுவது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்!!
முதலில் நமக்கு தேவையானது ஒரு கணினியும் ஒரு Internet Connection உம் தான். சரி நாம் Browser ஐ Open செய்து கொள்ள வேண்டும். பின்பு Open ஆன Window இல் www.uidai.gov.in என்று Type செய்து Enter செய்து கொள்ளவும். இந்திய அரசாங்கத்தின் அங்கிகரிக்கப்பட்ட அரசாங்க இணையதளம் Open ஆகும். அதில் My Aadhar என்னும் பிரிவில் "Order Aadhar PVC" என்னும் உள் பிரிவை Select செய்யவும். ஒரு புதிய Window Open ஆகும். அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை கொடுத்து Security Captcha கொடுத்து My Mobile is registered with Aadhar ஆ அதில் Tick செய்து ஓகே கொடுக்கவும். Mobile எண் registered ஆக வில்லை என்றால் "Mobile is not registered என்பதை தேர்வு செய்து ஓகே கொடுத்து Enter கொடுத்து உள் செல்லவும். பின்பு கட்டணத்திற்கு ஆன Page திறக்க படும். அதில் உங்களுக்கு உகந்த Payment முறையை தேர்ந்து எடுக்க வேண்டும். அதாவது Credit / Debit Card அல்லது Internet Banking அல்லது UPI என்பதை தேர்வு செய்து ஓகே கொடுக்கவும். நீங்கள் Credit / Debit Card முறையை தேர்ந்து எடுத்து இருந்தால் உங்கள் Credit / Debit Card ன் 12 இலக்க எண் மற்றும் Expiry Date பின்பு CVV நம்பர் கொடுத்து ஓகே கொடுத்தால், அடுத்த பக்கத்தில் உங்கள் Mobile எண்னுக்கு ஒரு OTP வந்து இருக்கும். அதை Type செய்து ஓகே கொடுத்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து Payment Debit ஆகி இருக்கும். ஆமாங்க இதற்கு ரூபாய் 50/- கட்டணமாக வசூலிக்கிறார்கள். Payment Debit ஆன உடன் அதன் பரிவர்த்தனை விவரங்கள் காட்டும். தேவை என்றால் அதனை நீங்கள் Download செய்து வைத்து கொள்ளலாம். அதில் முக்கியமாக SRN நம்பர் என்று ஒரு எண் இருக்கும். அது தான் நாம் இந்த கார்டு ஐ Track செய்வதற்கு ஆன எண். பொதுவாக நாம் Order செய்ததில் இருந்து 15 நாட்களுக்குள் நமது முகவரிக்கு தபால் மூலம் வந்து விடும். இந்த நம்பர் ஐ வைத்து அந்த கார்டு ன் நிலவரம் தபால் செய்து இருந்தால் தபாலுக்கு ஆன receipt எண் போன்ற விவரங்கள் காட்டும்.
இதன் பயன்கள்!!
1) இது எளிதில் கிழியாது
2) மழையால் சேதப்படாது
என்னங்க புதிய ஆதார் கார்டு ஐ Online இல் ஆர்டர் பண்ண போறீங்களா? Comment இல் சொல்லுங்க!!
உங்களுக்கு ஏதாயினும் கேள்விகளோ சந்தேகங்களோ இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
நன்றி!!
Comments
Post a Comment