பங்கு வர்த்தகத்தை பற்றி மேலும் விரிவான தகவல்கள்.
பங்கு வர்த்தகத்தில் இரண்டு வகை உண்டு ஒன்று Intra Day அதாவது குறிகிய கால முதலீடு அல்லது ஒரு நாள் முதலீடு. இன்னோரு முறை Holdingஅதாவது நீண்ட கால முதலீடு. பங்கு சந்தை காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து 3.30 PM மணிக்கு முடிவு அடைகிறது. பங்கு சந்தை தொடங்கிய உடனே பங்குகள் ஏறி இறங்க ஆரம்பிக்கும். அன்றைய அந்த நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு ஏற்ப அதன் பங்குகள் ஏறி இறங்கி கொண்டு இருக்கும். உதாரணமாக இன்று DCB Bank என்னும் வங்கியின் பங்குகள் ஏறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏன் என்றால் அந்த நிறுவனம் தற்சமயத்தில், அதன் லாப நஷ்ட கணக்கை வெளியிட்டுள்ளது. அந்த கணக்கின் படி அதாவது P/L, Balance Sheet ன் படி அந்த நிறுவனம் அதிக லாப ஈட்டும் நிறுவனம் அல்லது வங்கி என்று தெரிந்து கொள்ளலாம். அதன் காலாண்டு நிகர லாபம் 73 சதவீதம் ஆகும். இது ஒரு நல்ல லாபம் ஆகும். எனவே இந்த செய்தி வெளி ஆன உடனே அதன் பங்குகளின் மதிப்பு ஏறி கொன்டே இருக்கும், என் என்றால் முதலீட்டார்கள் தாங்கள் முதலீடு செய்த தொகைக்கு அதிக மடங்கு லாபத்தை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். அதனால் இந்த செய்தி வெளி ஆன அடுத்த கணம் முதல் முதலீட்டர்களின் பார்வை இந்த பாங்கின் அதாவது DCB பாங்கின் பக்கம் திரும்பி விடும். இதனால் இதன் பங்கின் விலை ஏறுமுகமாக இருக்கும். எனவே இப்பொழுது நாம் இந்த பங்கினை வாங்கினால் அதன் விலை ஏறுவது நிச்சயம். என் என்றல் அதிக முதலீட்டர்களின் கவனத்தினை ஈர்த்து இருக்கிறது. சரி பங்கின் விலை ஏறுமுகமாக இருக்கிறது இப்பொழுது என்ன செய்ய வேண்டும். நாம் இப்பொழுது அந்த பங்கினை வாங்க வேண்டும். நம்மிடம் இருக்கும் தொகைக்கு ஏற்றார்போல் அதன் அளவினை அல்லது எண்ணிக்கையை தீர்மானித்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் இதை வாங்கி விட்டோம். வாங்கும் முன்பு இன்னொன்றையும் நாம் தீர்மானிக்க வேண்டும். அதாவது இந்த பங்குகளை தினசரி Intra Day அல்லது நீண்ட காலம் Holding என்று முடிவு செய்து தான் வாங்க வேண்டும். அப்படி நீங்கள் Intra Day தேர்வு செய்து வாங்கி இருந்தால் மாலை சந்தை Close ஆகும் வரை அந்த பங்கின் நிலவரத்தை பார்க்க வேண்டும். நாளில் ஏதோ ஒரு சமயத்தில் அந்த பங்கின் விலை அதிகமா செல்லலாம். அப்பொழுது பார்த்து அந்த பங்கை விற்று விட்டால் அன்றைய தினமே நமக்கு லாபம் கிடைத்து விடும். மாறாக நாம் Holding ஐ தேர்வு செய்து இருந்தால் கவலையை மறந்து விடலாம். அந்த நிறுவனம் அல்லது வங்கியின் வளர்ச்சிக்கு ஏற்றார்போல் நமது பங்கின் மதிப்பும் ஏறி கொன்டே இருக்கும். நமக்கு தேவை படும் அன்று அன்றைய சந்தை நிலவரத்தை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்பட்டு அந்த விலையில் விற்று கொள்ளலாம். இவ்ளோ தாங்க.
சரி இன்று நாம் வாங்கிய DCB Bank ன் பங்குகள் ஏறுமா? அல்லது இறங்குமா? என்ற உங்கள் கருத்தை Comment இல் சொல்லுங்கள்.
உங்களக்கு ஏதானும் கேள்விகள் சந்தேங்கங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
நன்றி
Comments
Post a Comment