வருங்காலத்தில் அதிக வேலைவாய்ப்புகள் தரக்கூடிய புதிய படிப்புகள் மற்றும் துறைகள்; Jobs and fields that is going to create more employment in future;
உலகம் இன்று வேகமாக இயங்கி கொண்டு இருக்கிறது. மனிதன் பூமியை விட்டு வேறு கிரகத்தில் குடியேறுவதை பற்றி சிந்தித்து கொண்டுஇருக்கிறான். அதில் சிறிது துவக்க நிலை வளர்ச்சியையும் அடைந்து இருக்கிறான்.
காலம் வேகமா சுழன்று கொண்டு இருக்கிறது. காலத்திற்கு ஏற்ப நாமும் நமது நடைமுறை மற்றும் பழக்கவழக்கங்களை மற்றும் திறமையை புதுப்பித்துகொன்டே
இருக்க வேண்டும், இல்லையென்றால் நாம் இந்த வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து விலகி நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். சரி இருக்கட்டும் காலத்திற்கு ஏற்ற வாறு நமது திறமையை புதுப்பித்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறி செல்ல வேண்டியதுதான். அப்படி இபொழுது உள்ள காலகட்டத்தில் புதுமையான மற்றும் அதிக வேலைவாய்ப்புடன் கை நிறைய சம்பளம் தரக்கூடிய சில துறைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
முதலில் நாம் காணவிருக்கும் துறை Computing Power.
அதாவது இன்று எல்லாமே Computer மயம் தான். Smart Phone இல் இருந்து பெரிய பெரிய தொழிற்சாலைகள் Automation வரை எல்லாமே Computer தான். Technology முன்னேற்றம் அடைவது, Android இல் இருந்து Space செல்வதற்கு என்று எல்லாமே Computing Power மூலமே செயல் படுகிறது. புதிதாக வரவிருக்கும் Android Phone எந்த தொழில்நுட்பத்தில்
செயல்பட வேண்டும், எந்த மாதிரி Command களுக்கு அது என்ன மாறி Respond பண்ண வேண்டும், என்று எல்லாமே Computing தான். நமது Application களுக்கு என்ன மாறி Input கு என்ன Response செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது. அதாவது Smart Phone முதல் Machinery வரை என்ன மாதிரி Input குடுத்தால் எந்த மாதிரி Output தர வேண்டும் என்று தீர்மானிப்பது. இந்த துறையில் RPA எனப்படும்
Robotic Process Automation என்னும் உட்பிரிவில் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Data
Scientist, Robotics Programmer போன்ற Job Positions / Title இந்த துறையில் கிடைக்கும்.
அடுத்து துறை Smart Devices. இன்று எல்லாமே Android Phone தான். அதிலே அணைத்து விதமான Feature களும் வருகிறது. குறிப்பாக அதனுடன் இணைந்து இயங்கும் Wearable Devices / Smart Watch கள் நாம் தினமும் நடக்கும் தூரம், உடம்பில் உள்ள கலோரிகள் அளவு, மற்றும் உடம்பில் உள்ள தண்ணீர் அளவு, எப்பொழுது தண்ணீர் பருக வேண்டும், எப்பொழுது சாப்பிட வேண்டும், என்ன என்ன உணவு இப்பொழுது உள்ள உடல் நிலைமைக்கு தேவை, இதய துடிப்பு சீராக இருக்கிறதா, ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா என்று எல்லாமே நாம கூட இருந்து பரிசோதித்து சொல்லும் ஒரு Doctor போல இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல்
Wearable Footware நாம் தினமும் நடப்பதால் எவ்வளவு கலோரிகள் கரைகிறது என்று துல்லியமாக நமக்கு தெரிய படுத்தும். இது போன்ற Smart Device களுக்கு வருங்காலத்தில் அதிக மவுசு இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் இன்றைய வீடு உபகரணங்களும் Automation செய்து வந்து கொன்டே இருக்கிறது. Dish Washer முதல் Washing Machine வரை அனைத்துமே Automatic மற்றும் Sensors களுடன் இயங்குகிறது. நமது வேலைSwitch
ஐ On செய்வது மட்டும் தான். அதுக்கும் Remote வந்துவிடும், அல்லது ஒரே Remote இல் அணைத்து விதமான உபகரணங்களை
இயக்கி கொள்ளலாம். இது அனைத்துமே AI அதாங்க Artificial Intelligence என்னும் துறையை சார்ந்தது. இதிலும் அதிக மட்டும் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.
அடுத்த துறை Datafication. இன்று Smart Phone இல் தொடங்கி பெரிய பெரிய Corporate
நிறுவனங்கள் வரை அதில் இருக்கும் தகவல் மிகவும் முக்கியம். அது மட்டு இல்லாமல் நம்மிடம் இருக்கும் அனைத்தும், அதாவது Paper இல் உள்ள தகவல்கள் அனைத்தும் இன்று Digital மயம் ஆகிகொண்டுஇருக்கிறது. இவ்வளவு தகவல்களையும் பாதுகாத்து பராமரித்து வைக்க உதவும் படிப்பு தான் Datafication. இன்று உலகின் பெரிய நிறுவனங்களா கருதப்படும் Google, Facebook, Paytm என்று எல்லாமே Terabyte கணக்கில் டேட்டாக்களை பராமரித்து பாதுகாப்பதே பெரிய சவாலாக இருக்கிறது.
அடுத்த துறை Artificial
Intelligence. இந்த துறை நமது Android Phone இல் நமது Speech Recognition செய்வதில் துடங்கி Home Automation அதாவது வீட்டில் உள்ள அணைத்து உபகரணங்களுக்கும்
ஒரே Hand Device இல் இயக்க கூடிய அளவு வரை எல்லாமே Artificial Intelligence மூலமே செயல் படுகிறது. நாம் கதவின் முன் நின்றாள் கதவு அதுவாகவே Automatic ஆ திறப்பதும் ON என்று சொன்னால் Washing Machine அதுவாகவே இயங்கஆரம்பிப்பது,
வரை எல்லாமே Artificial
Intelligence என்ற தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
இந்த வகை துறையில் குறைந்தது வருடத்திற்கு 1,45,000 USD கள் வரை சம்பளம் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 17 லட்சம், தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த துறை Genomics. அது என்னங்க Genmomics? அதாவது நமது உடம்பில் உள்ள மூலக்கூறுகள் அதாங்க DNA பற்றிய துறை தான். இதன் மூலம் உடம்பில் என்ன என்ன வியாதிகள் வரும், அதற்கு எந்த மாதிரியான மருத்துவம் நமக்கு ஏற்றது, மட்டுமல்லாமல் இந்த வகை DNA கு என்ன வயதில் என்னமாதிரி வியாதிகள் வரும்? என்று முன்கூட்டிய கணிக்க கூடிய துறை தாங்க. நமக்கு திடிர்னு மாரடைப்பு என்று எல்லாமே எதிர்பார்க்காமலே வருகிறது. அனால் இந்த துறை நமக்கு வரவிருக்கும் வியாதிகளை முன்கூட்டிய கண்டறியஉதவுதால் நாமும் அதற்கான சிகிச்சையை முன்கூட்டிய தொடங்கி அந்த வியாதியை, பிரச்னையை வரவிடாமல் தவிர்க்கலாம். இந்த துறை Technical பிரிவில் Designing, Analysis, Diagnosis போன்ற Job Titles கள் இருக்கும். அதிக சம்பளத்துடன் கூடிய வேலையும், அதிக போட்டியுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னங்க இன்றைக்கு புதுசா ஏதும் தெரிஞ்சுக்கிட்டீங்களா? உங்கள் கருத்தை பகிரவும் மற்றும் இது பயனுள்ளது என்று கருதினால் உங்கள் நண்பர் உறவினர்களுக்கு பகிரவும். உங்களுக்கு ஏதேனும் கேள்வி சந்தேகம் அல்லது மாறுபட்ட கருது ஏதும் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
நன்றி
Comments
Post a Comment