இன்று எல்லாமே Online, Computer, Facebook, Whatsapp என்று உலகம் மிகவும் நவீனமாக சென்று கொண்டுஇருக்கிறது.
பரபரப்பாக நின்று யோசிக்க கூட நேரம் இல்லாமல், குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் வேகமா இயங்கி கொண்டுஇருக்கிறது. வாரஇறுதியில் குடும்பத்துடன் பிடித்ததை சமைத்து உண்டு மகிழ்வாக இருக்க ஒரு பழைய அனால் இப்பொழுது பிரபலம் ஆகி வரும் ஒரு உணவை இந்த பதிவில் பார்ப்போம்.
நாம் பார்க்க விருக்கும் உணவு உப்புக்கரி. அது என்னங்க உப்புக்கரி? பொதுவா நாம் கரி சமைத்தல் எண்ணெய் , காரம், கரம் மசாலா என்று சுவைக்காக பலவற்றை சேர்த்து செய்து ருசிப்போம். அனால் இந்த உப்புக்கரி என்பது செய்வது மிகவும் எளிமையாக, அதிக மசாலாக்கள் இல்லாமல் அனைத்து வயதினருக்கும் செரிக்க கூடிய வகையில் கறியை சமைப்பது தான்.
சரி இதை எப்படி தயார் செய்வது என்று பாப்போம். முதலில் நாம் சமைய இருக்கும் கறியை நன்றாக கழுவி அதில் இரன்டு கை அளவு உப்பு சிறிது மஞ்சள் தூள், இரண்டு Spoon மிளகாய் பொடி போட்டு நன்றாக கலக்கி ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கொதித்து வர விடவும். பின்பு அந்த கொதித்த நீரில் வரமிளகாய் நன்றாக அரைத்து அதில் கலக்கி விடவும். ஒரு இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு கலவையை அரைத்து ( நன்றாக மை போல் அரைத்து ) அந்த கொதித்த நீரில் போட்டு கலக்கி கொள்ளவும்.
சிறிது மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைத்த கறியை இந்த கொதிக்கும் நீரில் போடவும் பின்பு தேவைக்குக்கேற்ப உப்பை சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விடவும். சின்னசோம்பு அதாங்க சீரகத்தை உள்ளங்கையால் நன்றாக கசக்கி கொதிக்கும் நீரில் இட வேண்டும். தண்ணீர் சுண்டி உள்ள நிலையில் தேவைப்பட்டால் கறியின் மேல் பொடியாக நறுக்கி வைத்த கொத்துமல்லித்தழையை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி விடவும். அவ்ளோதாங்க உப்புக்கரி தயார் செஞ்சாச்சு. இதை இளசூட்டுடன் பரிமாறி சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
இதில் என்னையோ வேற வித மசாலாவோ சேர்க்காததால் இது உடம்புக்கு மிகவும் ஏற்றது மட்டுமல்லாமல் அணைத்து வயதினரும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணலாம். எந்த வித அஜினர கோளாறு இல்லாமல். இதில் சீரகம் சேர்ப்பதால் செரிமானத்துக்கு ஏற்றது. இதையே அப்படியே வெயிலில் காயவைத்து அதை காற்று புகாத Container இல் போட்டு வைத்து விட்டால், எப்போதேவையோ அப்போ எடுத்து சமைத்து கொள்ளலாம். எந்த வித மசாலா சேர்க்காததால் இது கெட்டுப்போகாது. இதை மிதமான Temperature இல் பதப்படுத்தி வைக்க வேண்டும்.
என்னங்க இந்த புதிய உணவை சமைக்க Ready ஆ? சமைத்து உங்கள் அனுபவத்தை
Comment இல் சொல்லுங்க. உங்களுக்கு இது உபயோகம் என்று கருதினால் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள். உங்களுக்கு ஏதேனும் கேள்வி சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
நன்றி
Comments
Post a Comment