அடுத்த ஐந்து ஆண்டில் பிரகாசிக்க கூடிய தொழில்கள் பற்றி இந்த பதிவில்
காண்போம்.
என்னதான் அன்பு நிறைந்த உலகம் என்றாலும் இவ்வுலகம் இயங்க வணிகம் தேவை
அதாங்க Business. பண்டைய காலத்தில் பண்ட மாற்று முறை முதல் இன்றைய Bitcoin முறை
வணிகம் வரை எல்லாமே வியாபாரம் தான். சரி அப்போ அடுத்த 5 ஆண்டில் கொடி கட்டி
பறக்க கூடிய தொழில்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
முதலாவது EV அதாங்க Electric Vehicle இது முற்றிலும் Battery இல்
இயங்குவதால் இது சுற்று சூழலை மாசுபடுத்தாது. அது மட்டும் இல்லாமல் இன்றைய
காலகட்டத்தில் Petrol விற்கும் விலையில் சாதாரணமாக Office போயிடு வரவே
குறைந்தது 100 ரூபாய் Petrol காக செலவு ஆகி விடுகிறது. இதை Electric Vechicle கள்
குறைந்த நேரம் அதாவது, 1/2 முதல் 1 மணி நேரம் வரை Charge செய்தாலே குறைந்தது 60 முதல் 80 km வரை
பயன்படுத்தலாம். இதற்கு பயன்படுத்தப்படும் மின்சார அளவு அதிகபட்சமாக 2 முதல் 3 Units வரை
தான். இதனாலே இந்த வகை வாகனங்களுக்கு எதிர்காலத்தில் அதிக வரவேற்பு உள்ளது.
இதற்கு மிக முக்கிய சவாலாக இருந்தது இதன் வேகம் தான். அதுவும் இன்றைய நவீன
தெழில்நுட்பத்தில் இதன் வேகத்தையும் அதிக படுத்தி விட்டார்கள்.
அடுத்ததாக நாம் பார்க்க விருக்கும் தொழில் EV
Charging Station தான். இப்பொழுது நமது வாகனங்களுக்கு எரிபொருளை Petrol ஆகவோ Diesel ஆகவோ
நிரப்பி கொள்கிறோம். ஆனால் Electric Vehicles கள்
வந்து விட்டால், அதற்கு மின்சாரம் தா தேவை. அதான் நமது வாகனங்களை அதிவேகம்
மற்றும் அதிக Efficiency உடன் Charge செய்து கொள்ள இந்த மாதிரி Charging Station கள்
வரவிருக்கிறது. இந்த வகை Business கு எதிர்காலத்தில் அதிக வரவேற்பு
உள்ளது. இதில் மிகவும் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்திய அரசாங்கம் சிறு
குறு தொழில்களின் அமைப்பு அதாங்க MSME
மூலம் இதற்கான பயிற்சி வகுப்பும் நடத்துகின்றது. அதாவது எந்த மாறி Technology
இல் Charging Station ஐ அமைப்பது? அதற்கு என்ன மாதிரி
கட்டிடம் தேவை? அதன் Infrastructure மற்றும் நிலம் வாங்குவது முதல் எல்லா Topics களும் Cover ஆகிறது.
அதுமட்டுமல்லாமல் படித்த இளைஞர்ளுக்கு மானியத்துடன் கூடிய கடன் உம் வழங்குகிறது.
இது பிற்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை தர கூடிய தொழில் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த தொழில் Drone Manufacturing தான்.
அதாங்க ஆளில்லாத சிறிய விமானம் தயாரித்தல். விவசாயத்தில் பயிர்களுக்கு
பூச்சி மருந்து தெளிப்பதில் இருந்து நில ஆய்வு, சினிமா துறை என பல்வேறு துறைகளில்
பயன்படுகிறது. இது Remote இல் இயங்கக்கூடியது. இதனுள் உள்ள HD Camera
அனுப்படும் இடத்தின் படங்களை மிகவும் துல்லியமாக எடுத்து நமக்கு அனுப்பும்.
இதனுடன் நமக்கு தேவையான Accessory ஐ பொருத்தி கொள்ளலாம். உதாரணமாக இதை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம்
என்றால் இதனுடன் பூச்சி கொல்லி Can ஐ Fix செய்து
விட்டால் நாம் இதனை இயக்கி செடிகளுக்கு பூச்சி மருந்தை தெளித்து
கொள்ளலாம். கல்யாண மண்டபத்தில் படம்பிடிப்பது முதல், அடர்ந்த காடுகளின்
உள்ளே என்ன இருக்கிறது என்பது வரை தெரிந்து கொள்ள இது பயன்படுகிறது. மனிதன்
செல்ல முடியாத இடத்திலும் கூட இந்த வகை Drone கள்
சென்று படம்பிடித்து நமக்கு அனுப்பி வைக்கும்.
அடுத்த தொழில் என்னவென்று பார்த்தால் 3 D Printing.
அதாவது மும்பரிமான அச்சி. இது பார்த்தால் ஒன்று முதல் இரண்டு Cubic
Feet அளவு தா இருக்கும். நமக்கு தேவையான அச்சுகளை Computer இல்
வடிவமைத்து OK கொடுத்தால் Paper Print ஆவது போல் நமக்கு தேவையான அச்சு தயார் ஆகி வெளி வந்து விடும்.
இது Casting கு தேவை படும் பெரிய பெரிய Furnace மற்றும் அதிக இடப்பரப்பை
தவிர்த்து எளிய முறையில் முடிந்துவிடும்.
ஐந்தாவது நாம் பார்க்கப்படும் தொழில் விவசாயம் தாங்க, அதாவது Organic
Farming ஆகும். பொதுவாக நாம் செய்யப்படும் விவசாயத்தில் ரசாயனம், Fertilizer,
பூச்சிக்கொல்லி போன்ற செயற்கை உரங்கள் மற்றும் மருந்தை பயன்படுத்துகிறோம். இந்த
வகை Farming இல் எந்த வித ரசாயனமே பயன்படுத்தாமல் விளைவிப்பதால்
இது மிகவும் ஆரோக்யம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு பயன்படுத்தப்படும்
உரங்கள் முற்றிலும் இயற்கையாக Bio Manure முறையில் தயாரிக்கபடுகிறது.
இதனால் இந்த முறையில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் சத்து
வாய்ந்ததாக இருக்கிறது
என்னங்க கொடுத்த தகவல் பயனுள்ளதாக இருக்கா? இருந்தா Comment இல்
சொல்லுங்க. உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கும் தெரிய படுத்துங்க. உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம்
இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி
Comments
Post a Comment