அதிக படியான சத்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள Acoustic Insulation ஐ செய்யுங்கள் . Get rid of High end noise, install acoustic insulation boards
Acoustic Insulation என்றால் என்ன?
Acoustic Insulation என்பது நாம் இருக்கும் அறைக்கு வெளியில் இருந்து எந்தவித சத்தமோ நம்மளை தொந்தரவு செய்யாமல் இருப்பதே ஆகும். பொதுவாக நாம் ஏதும் தொழிற்கூடங்கள் அருகில் வீடு இருந்தாலோ அல்லது சாலையின் ஓரத்தில் நமது வீடு அமைந்து இருந்தாலோ வெளியில் இருக்கும் Traffic சத்தம் நம்மளை மிகவும் தொந்தரவு செய்யும். அப்படி அந்த ஒலி அதாவது சத்தத்தில் இருந்து நம்மளை பாதுகாத்து கொள்வதற்கு தான் Acoustic Insulation ஐ செய்கிறோம்.
சரி இதனால் என்ன பயன்? எப்படி அந்த ஒலியின் அளவு அதாவது அந்த சத்தத்தின் அளவு குறைகிறது? என்று இந்த பதிவில் காண்போம்.
பொதுவாக நம் அன்றாடம் கேட்கும் ஒலியின் அளவானது 45 dB கீழ் தா இருக்கும். இதற்கு மேல் அதாவது 45 dB கு மேல் சென்றால் அதை சத்தம் என்கிறோம். சத்தம் என்பது 45 dB இல் இருந்து 150 dB வரை வேறுபடும், சாலையில்Traffic சத்தம் 45 dB முதல் 60 dB வரையிலும் இருக்கும். உதாரணமாக Tractor மற்றும் JCB களின் சத்தம் 60 dB முதல் 80 dB வரையிலும் Generator போன்ற கண ரக Machine கள் ஓடும் சத்தம் 150 dB வரையிலும் இருக்கும். இந்த ஒவ்வொரு சத்தத்தின் அளவை பொறுத்து நம் Acoustic Insulation ஐ செய்ய வேண்டும். உதாரணமாக நம் வீடு சாலையின் அருகில் இருக்கிறது என்று வைத்து கொள்வோம், இப்பொழுது நமது வீட்டில் சாலையில் ஓடும் வாகனங்கள் மற்றும் அவை எழுப்பும் Traffic சேர்த்து 60 dB ஆக நமது செவிகளுக்கு இடையூறு செய்யும். நாம் வீட்டில் தேவையான ஒலியின் அளவு என்பது 45 dB ஆகும். இப்பொழுது மீதம் உள்ள 15 dB அதாவது, தேவையற்ற சத்தத்தை நாம் தவிர்க்க வேண்டும். இதற்கு Acoustic Insulation தன ஒரே வழி. சரி அதை எப்படி செய்வது? Acoustic Insulation இற்கு ஒலியினை அதாவது சத்தத்தை Absorb செய்யும் திறன் கொண்ட பொருள் வேண்டும்.
சந்தையில் இதற்கெனவே பிரத்தியோகமாக பொருள் இருக்கிறது இதன் Technical பெயர் Rock Wool Panels ஆகும். இந்த Rock Wool Panels ஆனது Slab வடிவில் வருகிறது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் இந்த Slab களை பொருத்துவதற்கு மரத்தில் ஆன சட்டத்தை செய்து, இந்த Slab களை அதனுள் பொறுத்த வேண்டும். அவ்வாறு பொருத்தி விட்டால் இந்த Slab கள் தேவைக்கு அதிகமான ஒலியினை Absorb செய்து கொள்ளும். சரி ஒலியினை Absorb செஞ்சாச்சு அவ்வளவு தானே? ஆமாங்க. நமது குறிக்கோள் நிறைவேறி விட்டது.
அனால் Aesthetically அதாவது அழகு கண்ணோட்டத்துடன் பார்க்கும் பொது பணி இன்னும் முழுமையடையவில்லை. முழுமையடைய என்ன செய்ய வேண்டும் வெளிப்புறத்தில் Finishing செய்ய வேண்டும். அதை எவ்வாறு செய்ய வேண்டும்? அதை செய்ய நமக்கு பிடித்த Color இல் காட துணியை அந்த Slab மற்றும் மர சட்டத்தின் மேல் படர்த்தி Finishing செய்ய வேண்டும். அவ்வளவு தாங்க ஒலியில் இருந்து, அதாவது தேவையற்ற சத்தத்தில் இருந்து பாதுக்காத்தும் விட்டாச்சு அழகிய தோற்றமும் கொடுத்தாச்சு.
இதை எப்படி அதிக ஒலி எழுப்பும் களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment இல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்
Comments
Post a Comment